1. கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
3. 'கேண்மை'-இச்சொல்லின் எதிர்ச்சொல்.
4. 'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
5. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
-இதில் அமைந்து வரும் மோனை.
6. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
இதில் அமைந்து வரும் தொடைநயம்.
7. 'அரியவற்றுள்'-இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
8. சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
9. 'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா' எனக் குறிப்பிடும் நூல்
10. பொருந்தாததை எடுத்து எழுதுக.